17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அணைப்பட்டியில் குவிந்த பொதுமக்கள்

அணைப்பட்டியில் குவிந்த பொதுமக்கள்

எழுதியவர்: mohan February 1, 2022, 12:33 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கோவிலின் அருகே வைகை ஆறு செல்வதால் ஆற்றில் பொதுமக்கள் அமர்ந்து தை அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் ஆண்டுதோறும் நடைபெறும். அந்தவகையில் நேற்று திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அணைப்பட்டி அருகே உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் முன்பு அமைந்துள்ள வைகை ஆற்றுப்படுகையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது ஆங்காங்கே வைகை ஆறு  செல்லும் நீரில் குளித்து நீராடி பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று வீர ஆஞ்சநேயரின் தரிசனம் பெற்றுச் சென்றனர். நீங்க பொதுமக்களுக்கு தேவையான சுகாதார பணிகளை பிள்ளையார் நத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் முனி ராஜா தலைமையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சி செயலாளர் சின்னசாமி, மற்றும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!