18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – மு க அழகிரி பிறந்த தினவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை – மு க அழகிரி பிறந்த தினவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

எழுதியவர்: mohan January 30, 2022, 6:22 pm

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரி தலைமையில் முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துப்பாண்டி நிர்வாகி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் முக அழகிரி பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜை செய்தனர் பின்னர் வெடி வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர் பேருந்தில் பயணம் செய்த மக்களுக்கும் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் இவ்விழாவை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் இதில் தமிழ்ச்சோலை பாலா ஊத்துக்குளி சின்னமணி கருப்பட்டி வருண் அம்மசியபுரம் கார்த்திக் தென்கரைபுதூர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் இதேபோல் விக்கிரமங்கலம் அருகே கல்புலிச்சான்பட்டியில் பால்பாண்டி தலைமையில் முக அழகிரி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!