17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவிலை சுற்றி கழிவுநீர் மன அமைதியை தேடி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நோய்த்தொற்று உடன் வீடு திரும்பும் அவலம் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

கோவிலை சுற்றி கழிவுநீர் மன அமைதியை தேடி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நோய்த்தொற்று உடன் வீடு திரும்பும் அவலம் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

எழுதியவர்: mohan January 30, 2022, 11:14 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 79 வார்டு கூடலழகர் பெருமாள் கோவில் வடக்கு ரத வீதி அனுமார் கோவில் அருகே பல நாட்களாகவே சாலையில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .மாநகராட்சி அதிகாரிகளிடமும் மற்றும் அப்பகுதி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி துணை ஆணையரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பக்தர்களும் அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டுகின்றனர் .கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன அமைதியைத் தேடி வரும் பொழுது வீட்டுக்குச் செல்லும் பொழுது நோய்த்தொற்றை பெறுவதாக செல்வதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள அனுமார் கோவில் அருகே பாதாளச் சாக்கடை உடைந்து ஆறு போல சாலையில் ஓடுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர் எத்தனையோ முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெரும் குற்றம்சாட்டுகின்றனர். இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!