17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித் தொகை; தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்..

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித் தொகை; தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்..

எழுதியவர்: mohan January 29, 2022, 10:30 am

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து அந்தகுழந்தைகள் 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கும் வகையிலும், அதேபோல் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணமாக ரூ.3 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசிமாவட்டத்தில் பெற்றோர் அல்லது அவர்களில் ஒருவரை இழந்த 220 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். ஆவணங்கள் சரிபார்த்து நிவாரண உதவித் தொகைக்கான காசோலை, வங்கி வைப்புத்தொகை சான்றுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 63 குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில்தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!