திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே சமூக சீர்திருத்தவாதியும், கல்வி தந்தையுமான சுவாமி சகஜானந்தர் அவர்களின் 132 வது ஆண்டு பிறந்த நாள் விழா .
மாவட்ட செயலாளர் சி.எம்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியின் முன்னதாக நகர செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.கருத்தரங்கில்த.தீ.ஒ.முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்; சுவாமி சகஜானந்தாஆரணி பகுதி மேல் புதுப்பாக்காம் கிராமத்தில் பிறந்தவர் கடலூர் மாவட்டத்தில் நந்தனார் கல்வி கழகத்தை துவக்கி கல்விப் புரட்சி செய்தவர் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.. மகாத்மா காந்தி இரண்டு முறை கல்வி கழகத்தை சந்திக்க வந்துள்ளார் என்று பேசினார். கருத்தரங்கில் மாவட்ட செயலாளர் சிவக்குமார்த.தீ.ஒ.முன்னணி மாவட்ட செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள்எம்.வீரபத்திரன்எ.இலட்சுமணன் எஸ்.ராமதாஸ், இடைக்குழு தோழர்கள்பி.கணபதி, ஆர்.காமராஜ்உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகள்வழங்கினார்கள்…நிகழ்ச்சியின் இறுதியில் பி.ஜானகிராமன் நன்றியுரை ஆற்றினார்
செங்கத்தில் சுவாமி சகஜானந்தர் 132வது பிறந்த நாள் விழா
எழுதியவர்: mohan January 29, 2022, 10:17 am




You must be logged in to post a comment.