வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன்காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏரளமான பொதுமக்கள் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.விழாவிற்கு பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் கலந்துகொண்டு முகாமை துவக்கிவைத்து பார்வையிட்டார்.பிரம்மபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோகன்தாஸ் வரவேற்றார்.திருவலம் ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் ராணிநிர்மலா, சித்தா மருத்துவ அலுவலர் மல்லிகா, ஒன்றியபெருந்தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், பஞ்சாயத்து துணைத்தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தமிழரசி வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் இலக்கியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி, பஞ்சாயத்து செயலாளர் பஞ்சாட்சரம், ஆய்வாளர்கள் பூபதி, ராகவன், ராஜ்குமார், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பிரம்மபுரத்தில் வரும் முன்காப்போம் மருத்துவ முகாமை துவக்கிவைத்த வேலூர் எம்.பி.
எழுதியவர்: mohan January 28, 2022, 4:16 pm




You must be logged in to post a comment.