18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி.

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி.

எழுதியவர்: mohan January 28, 2022, 2:59 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மல்லியம் பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி வயது 62. விவசாயி ஆவார். இவர் நேற்று மாலை மல்லியம்பட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சித்தர்கள் நத்ததை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முத்துப்பாண்டி வயது 42. என்பவர் முத்துச்சாமி மீது அதிவேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துசாமியை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்த போது வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக அங்கிருந்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!