17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

எழுதியவர்: mohan January 26, 2022, 5:39 pm

இந்தியா முழுவதும் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் இன்று பிரதமரும், சென்னையில் தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் 73-வது குடியரசுதினத்தை கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர். அதேபோல் மதுரை விமான நிலையத்திலும் 73 வது குடியரசுத்தினத்தை கொண்டாடும் விதமாக விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமானநிலைய தீயணைப்பு துறை ஊழியர்கள் மற்றும் விமானநிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மதுரை விமான நிலைய இயக்குனர் இயக்குனர் அலுவலகம் முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் உமாமகேஸ்வரன் மற்றும் விமான நிலைய இயக்குனர் பாபு ராஜ் ஆகியோர் கொடியேற்றி தொடங்கி வைத்தனர். அதற்கு முன்னதாக மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் கமாண்டர் உமாமகேஸ்வரன், உதவி கமாண்டர் சனிஷ் ஆகியோர் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தேசியக்கொடி, இனிப்புகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!