18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் 73-வது குடியரசு தின விழா..

கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் 73-வது குடியரசு தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2022, 1:22 pm
கீழக்கரை இஸ்லாமியா  கல்வி  நிறுவனங்களின்  சார்பில் 73-வது  சுதந்திர தின விழா இஸ்லாமியா மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் பள்ளி தாளாளர் எம். எம். கே. முகைதீன் இப்ராஹிம்  தேசியக்கொடி ஏற்றி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
எம்.எம்.கே. அலீப்தீன், நஜிம் மரைக்காயர் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். கீழக்கரை அளவிலான  பெண்களுக்கான கை எறிதல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் பரிசு வழங்கி பாராட்டினார். 10-வது வகுப்பு மாணவி எம்.ஜெ.ஷெஹினா மெஹ்னாஸ்.கிராஅத் ஓதி விழாவை தொடங்கி வைத்தார். மாணவி ஹனுனா மரியம் வரவேற்புரை ஆற்றினார். என். ஆயிஷா ஸவ்பிகா குடியரசு தின உரையாற்றினார். மாணவி ஆசியா ரிபா நன்றி கூறினார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்
பள்ளி முதல்வர், தலைமையாசிரியர்கள். இஸ்லாமியா  மெட்ரிக் பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி  ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!