17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நரசிங்கநல்லூர் கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

நரசிங்கநல்லூர் கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

எழுதியவர்: mohan January 25, 2022, 6:17 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட நரசிங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலைமணி இராமச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சிறந்த கிடரி கன்றுகள் வளர்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் அம்மாபாளையம் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். நித்யா தலைமையில், கால்நடை உதவியாளர் ஜாபர்சாதிக் மற்றும் செயற்கை முறை கருவூட்டாளர் சத்திய மூர்த்தி ஆகிய குழுவினர் 300 மேற்பட்ட கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!