திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் முன்பு இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்து இளைஞர் முன்னணி சார்பில் பிறந்தநாள் விழா ஒன்றிய தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது. விழாவில் நேதாஜியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். அப்போது உறுதிமொழி
எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர துணைத்தலைவர் சாருகேஷ், நகரச் செயலாளர் நிஷாந்த், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்து இளைஞர் அணி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சத்தியசீலன், இந்து முன்னணி மாவட்ட மேற்கு செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர்கள் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் நகர பொறுப்பாளர்கள் ராஜாராம், வாஞ்சிநாதன், கிஷோர், பாலா, அபிஷேக், ரோகித் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக ஒன்றிய செயலாளர் சித்தன் நன்றியுரை கூறினார்.
நிலக்கோட்டையில் 125 வது நேதாஜி பிறந்தநாள் விழா
எழுதியவர்: mohan January 24, 2022, 10:35 am




You must be logged in to post a comment.