18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் போக்குவரத்துக்கு இடையூறாக திமுக பேனர்கள் அகற்றகோரி அதிமுகவினர் போராட்டம்

காட்பாடியில் போக்குவரத்துக்கு இடையூறாக திமுக பேனர்கள் அகற்றகோரி அதிமுகவினர் போராட்டம்

எழுதியவர்: mohan January 23, 2022, 10:35 am

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர் கதிர் ஆனநத் பிறந்தநாள் முன்னிட்டு நெடுஞ்சாலை ஓரமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் கடந்த ஒரு வாரமாக பேனர்கள் வைக்கப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது.இதை வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையரும், காட்பாடி, விருதம்பட்டு காவல்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே தலைமையில் காட்பாடி ஓடைப்பிள்ளையார்கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன், நாராயணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அமர்நாத், மாநகர இளைஞர் அணிசெயலாளர் ராகேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், அண்ணா தொழிற்சங்கம் ஆனந்தன் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கழிஞ்சூர்ரவி, நவீன்குமார் உள்ளிட்ட கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!