மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலவெள்ளைமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாயி -ஒச்சம்மாள் தம்பதியினர்.விவசாயியான இவர் கிராம மலைஅடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்திலேயே வீடு அமைத்து; குடியிருந்து
வருகின்றார்.இவர் 30க்கும் மேற்ப்பட்ட ஆடுகளை தனது தோட்டத்தில் ஆட்டுக்குடில் அமைத்து வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று ஆட்டுக் கொட்டகையில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது அங்கு 15க்கும் மேற்ப்பட்ட ஆட்டுக்குட்டிகள் வலியால் துடிதுடித்து அலறியபடி இறந்துள்ளன.ஏதேனும் மர்ம விலங்கோ அல்லது நாயோ கடித்தற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் அதனால் ஆடுகள் இறந்திருக்கலாம் என மாயி தெரிவித்தார்.இது குறித்து வனத்துறையினரிடம் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மர்ம விலங்கு தாக்கி ஒரே நேரத்தில் 15 ஆடுகள் பலியான சம்பவம்; உசிலம்பட்டிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
மேலவெள்ளைமலைப்பட்டியில் மர்ம விலங்கு கடித்து 15க்கும் மேற்ப்பட்ட ஆடுகள் பலியாகின.
எழுதியவர்: mohan January 22, 2022, 7:27 pm




You must be logged in to post a comment.