18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே 10 வருடங்களுக்குப்பின் கெடாமுட்டு போட்டி

உசிலம்பட்டி அருகே 10 வருடங்களுக்குப்பின் கெடாமுட்டு போட்டி

எழுதியவர்: mohan January 22, 2022, 11:36 am

கடந்த 10 வருடங்களுக்கு பின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சி.கல்லூத்தில் கெடா முட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றது.இதற்காக தேனி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்ப்பட்ட கெடாக்கள் பங்கேற்றுள்ளன.இரண்டு பல் நான்கு பல் என கெடாக்கள் வயதிற்கேற்றார் போல் தரம் பிரிக்கப்ட்டு மோத விடப்பட்டன.

வெற்றி பெற்ற கெடாக்களுக்கு சில்வர் பானை அண்டா போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.கெடாமுட்டு போட்டியை முன்னிட்டு உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் சி.கல்லூத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு கெடாமுட்டு சங்கத்தலைவர் ரமேஷ் செய்திருந்தாா்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!