17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வளையன் குளம் பகுதியில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை காணொலி காட்சிகள்மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

வளையன் குளம் பகுதியில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை காணொலி காட்சிகள்மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

எழுதியவர்: mohan January 22, 2022, 11:12 am

தமிழக அரசு சார்பாக புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழாவினை சென்னையில் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.இதன் ஒரு பகுதியாக மதுரையில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த பின் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதனை தொடர்ந்து 50 பேருக்கு மாத உதவித்தொகை மற்றும் 40 பேருக்கு பிரதான் மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான அரசாணை வழங்கப்பட்டது. மேலும் 30 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் போன்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி அழகுமலை, ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துப்பிள்ளை பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!