திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கம் வட்ட செயலாளர் சர்தார் தலைமையில் நடைபெற்றது.
பச்சையப்பன் , வஜீர் பாஷா, குப்புசாமி, ஜக்கரியா, மகாவிஷ்ணு ,பாலமுருகன், ஏழுமலை, ஜெயராமன், குமார், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் முத்தையன், மாவட்ட பொது செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.72 ஆவது குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட தியாகிகளாக வேலுநாச்சியார் வ உ சி சிதம்பரனார் பாரதியார் ஆகியோரின் திருவள்ளுவர் படங்கள் இடம்பெற்ற அணிவகுப்பு ஊர்தியை அனுமதிக்காத மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் செங்கம் ஒன்றிய நிர்வாகக்குழு சுப்பிரமணியன், ஹமீத், மகாதேவி ,யுவராஜ் ,தங்கமணி, பக்ருதீன். சனாவுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan January 21, 2022, 5:28 pm




You must be logged in to post a comment.