17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை, முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசினர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை, முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசினர்.

எழுதியவர்: mohan January 20, 2022, 10:36 am

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வசித்து வருகிறார். பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை அடுத்து, நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் வந்த ராஜேந்திரபாலாஜி, திருத்தங்கல்லில் உள்ள தனது வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை, ராஜேந்திரபாலாஜியின் வீட்டிற்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா உட்பட அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்தனர். முன்னாள் அமைச்சர்களுக்கு, ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்தார். முன்னாள் அமைச்சர் வீட்டிற்கு, அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!