17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் தேசிய தீ விபத்து தடுப்பு தினம்..நேரடி வீடியோ ரிப்போர்ட் மற்றும் புகைப்பட தொகுப்பு..

இராமநாதபுரம் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் தேசிய தீ விபத்து தடுப்பு தினம்..நேரடி வீடியோ ரிப்போர்ட் மற்றும் புகைப்பட தொகுப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 21, 2018, 1:06 am

இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் 20-01-2018 அன்று தேசிய தீ விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அலுவலர் சாமிராஜ் தலைமை வகித்தார். மேலும் நிலைய அலுவலர் நாகராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னனி தீயணைப்பு வீரர்கள் ராஜேந்திரன் மற்றும் கேசவன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இப்பயிற்சியில் விபத்து ஏற்பட்டால் முதலுதவி கொடுக்கும் முறை, வீட்டில் மற்றும் வெளியிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கும் முறைகள் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பயிற்சியில் கலந்து கொண்டது, பயிற்சியாளர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியதை காண முடிந்தது.

மேலும் இப்பள்ளியின் முதல்வர் நந்தகோபால், பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இப்பயிற்சி முகாமுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினர்.

புகைப்பட தொகுப்பு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!