17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே காரிக் கூட்டத்தில் மீலாது விழா.

இராமநாதபுரம் அருகே காரிக் கூட்டத்தில் மீலாது விழா.

எழுதியவர்: mohan January 12, 2022, 2:12 pm

இராமநாதபுரம் அருகே காரிக்கூட்டத்தில் மீலாது விழா நடைபெற்றது. இவ்விழாவை ஜாகீர் உசேன் ஆலிம் கிராஅத் ஓதி விழாவை தொடங்கி வைத்தார். சக்கரக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவரும், காரிக் கூட்டம் ஜமாத் தலைவருமான டாக்டர் எஸ்.எம். நூர் முகமது தலைமை வகித்தார். மலேசிய முஸ்லிம் ஜமாத் தலைவர் கேஅன்வர் கான் மற்றும் காரிக்கூட்டம் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். மௌலவி ஹாபிழ்.ஹிதாயதுல்லா துவக்கி வைத்தார். இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் மௌலானா மௌலவி எம்.ஐ. முகமது சாகிப் பைஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மவுலவி ஹாபிழ் ஹாஜி ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் குரான் மனனம், பயான், உரையாடல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். ஹிதாயா இஸ்லாமிய இளைஞர் சங்க தலைவர் முகமது பைசல் கான் நன்றி கூறினார். உலமாக்கள், காரிக்கூட்டம் கிராம பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காரிக்கூட்டம் ஜமாஅத், மலேசியா காரிக்கூட்டம் முஸ்லிம் ஜமாஅத், ஹிதாயா இஸ்லாமிய இளைஞர் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.இளையான்குடி தலைமை உஸ்தாதா ஹஜ்ஜா யாஸ்மின் ஆலிமா தலைமையில் பெண்களுக்கு பயான் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!