18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு.

செங்கம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு.

எழுதியவர்: mohan January 11, 2022, 5:51 pm

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக செங்கம் கிழக்கு ஒன்றியம் சார்பாக மேல்பென்னாத்தூர் கிராமம், மாரியம்மன் கோயில் அருகே நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.பாஜக நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் மாரியம்மன் கோயில் அருகே பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணவேணி நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாநில எஸ்டி அணி செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், ஒன்றிய பொதுச் செயலாளர் முனியப்பன், அரங்கநாதன், அறிவு சார் பிரிவு மாவட்ட தலைவர் அருணகிரிநாதன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன், மாவட்ட மகளிரணி தலைவர் ராஜதமயந்தி, மெட்டில்ராணி, சந்திரா, ஒன்றிய மகளிர் அணித்தலைவர் சுமதி, விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், முத்து, கார்த்தி, சதீஷ், கோவிந்தராஜ், கோவிந்தராசன், ஜெயநாத், சதீஷ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, லதா உள்ளிட்ட மகளிர் புதிதாக பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை மாவட்ட பொது செயலாளர் சேகர் காவி துண்டு அணிவித்து வரவேற்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!