17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய டிஎஸ்பி.

உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய டிஎஸ்பி.

எழுதியவர்: mohan January 10, 2022, 3:17 pm

உசிலம்பட்டியில் சர்வதேச உரிமைகள் கழகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வாக முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினர்.உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே சர்வதேச உரிமைகள் கழகத்தினர் மற்றும் உசிலம்பட்டி காவல்துறையினர் இணைந்து ஒரு நாள் விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்.

 உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார் ,சௌந்தரபாண்டி, பொன்னுச்சாமி, சர்வதேச உரிமைகள் கழக மதுரை மாவட்ட தலைவர் சூர்யா பாண்டி மாவட்ட துணைத்தலைவர் கல்யாண சுந்தர் மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன் மாவட்டச் செயலாளர் மொக்கராசு, ஒன்றிய செயலாளர் வினோத் குமார், மற்றும் காவல்துறையினர், நிர்வாகிகள் கலந்துகொண்டு உசிலம்பட்டி பேருந்து நிலையம் பஸ்சில் வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு  முக கவசம், கபசுர குடிநீர் வழங்கினார்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!