17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது..

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது..

எழுதியவர்: mohan January 9, 2022, 11:36 am

குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளஞ்சி பகுதி அருகில் சார்பு ஆய்வாளர் சண்முகவேல் ரோந்து பணியில் இருந்த போது அங்கு விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த வல்லம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சுரேஷ்குமார் (26) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!