18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நம்ம தெரு நட்பு வாட்ஸ் அப் தளம்(N T N) உதவி வழங்கும் நிகழ்ச்சி…

கீழக்கரை நம்ம தெரு நட்பு வாட்ஸ் அப் தளம்(N T N) உதவி வழங்கும் நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் January 7, 2022, 12:04 pm

கீழக்கரை  கிழக்குத்தெரு, நம்ம தெரு நட்பு ( NTN) சார்பாக மறைமுக தர்மம் அளிக்கும் நிகழ்ச்சி 06-01-2022 அன்று மாலை 5 மணியளவில் பட்டாணியப்பா தர்ஹா அருகில் இருக்கும் அபுல்ஹஸன் வீட்டுத்திடலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக நம்ம தெரு நட்பு உறுப்பினர் முஸவ்வீர் கிராத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வரவேற்புரை,நம்ம தெரு நட்பு செயல்பாடுகள் குறித்து தளத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அயூப்கான் விளக்கி கூறினார். மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் வாழ்த்துரையாற்றினார். அதனை தொடர்ந்து தர்மத்தின் சிறப்பு பற்றி பேராசிரியர் ஆசிப் சிறப்புரை ஆற்றினார்..இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் நம்ம தெரு நட்பு புரவலர்கள் செய்யது பாரூக், முஹம்மது ஜபருல்லாக்கான், பாக்கர், ஹமீது இபுறாகீம், முஸவ்வீர், அஹமது அஸ்லம், பரீது, சம்சுதீன் ஆலிம்,காதர் சுல்தான்,நஸீர் அஹ்மது, முகம்மது, சலீம், ரீஹான்,அபுல் ஹசன்அபு ஹாரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை நம்ம தெரு நட்பு ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மது அயூப்கான், பேராசிரியர் ஆசிப், அஜ்மல் கான் ஆகியோர் செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!