17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் கணினி மென்பொருள் குறித்த கருத்தரங்கு

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் கணினி மென்பொருள் குறித்த கருத்தரங்கு

எழுதியவர்: mohan January 5, 2022, 2:50 pm

வேலூர் தொரப்பாடியில் தந்தைபெரியார் தொழிற்நுட்ப அரசு கல்லூரி இயங்கிவருகின்றது. இதன் முதல்வராக டாக்டர் மா.அருளரசு இருந்து வருகிறார். ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.  மாணவ – மாணவிகளுக்கு மேல்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்தது ஆகும்.அதன்படி நேற்று கல்லூரியில் மீடியா சென்ட்ரலில் கணினி பொறியியல் துறைசார்பில் கணினி மென்பொருள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு தலைமை தாங்கினார்.அமெரிக்கா கலிபோர்னியாவில்உள்ள எக்ஸ்பிரஸ் சான்மே டோவின் இஞ்சினியரிங் பிரிவு இயக்குநர் மகேந்திரபாபு பார்த்தசாரதி சிறப்பு. அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:இந்த கணினி மென்பொருள் துறையில் சான்றிதழ், பட்டய படிப்புகள் உள்ளன. நீங்கள் முதுநிலை படிப்பை படித்துவிட்டு இதை படிக்கலாம். மென்பொருள் வளர்ச்சி உயர்ந்த நிலைக்கு சென்றுகொண்டே உள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகம்.பொதுவாக ஐ.டி.துறையில் வேலைக்கு சேருபவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் சமபளம் அதிகம் வருகிறது என்பதை வேறு துறைக்குமாறுதல் சென்றுவிடுகின்றனர். அப்படி செல்வதால் முழுமையான திறமையை வளர்த்து கொள்ள முடியாது. ஆகவே குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் வரை அதில் பணிபுரிய வேண்டும்.மென்பொருள் துறையில் இயந்திரவியல் பிரிவில் அதிக வாய்ப்புகள் உள்ளது. தற்சமயம் கணினி துறையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் பயன் உள்ளதாக உள்ளது என்று அவர் கூறினார். மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்றனர். கல்லூரி துணைமுதல்வர் ஸ்ரீராம்பாபு, இந்த துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி, துணை பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியை ரகீலா பேகம் வாழ்த்துரை வழங்கினார். இந்த துறையின் மாணவ செயலாளர் ரத்திகா நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!