17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பேருந்தில் தவறவிடப்பட்ட தங்க செயின்; 30 நிமிடத்தில் கண்டுபிடித்த சுரண்டை எஸ்ஐ..

அரசு பேருந்தில் தவறவிடப்பட்ட தங்க செயின்; 30 நிமிடத்தில் கண்டுபிடித்த சுரண்டை எஸ்ஐ..

எழுதியவர்: mohan January 4, 2022, 11:15 am

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து தென்காசி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த போது தனது தங்க சங்கிலி காணாமல் போனதாக சிவகுருநாதபுரத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்‌. இந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் விமலா உடனடியாக சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சாம்பவர் வடகரை சார்பு ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் உடனடியாக சுரண்டையில் இருந்து தென்காசி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை சாம்பவர் வடகரையில் நிறுத்தி சோதனை செய்ததில் பேருந்தின் உள்ளே கிடந்த தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது. பின்னர் சங்கிலியை தவறவிட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சார்பு ஆய்வாளர் விமலா மீட்க்கப்பட்ட 3 சவரன் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தார். சங்கிலியை மீட்டுக்கொடுத்த காவல் துறையினருக்கு அப்பெண் கண்ணீர் மல்க தனது நன்றியினை தெரிவித்தார். மேலும் துரிதமாக செயல்பட்டு 30 நிமிடத்திற்குள் தங்கச்சங்கிலியை மீட்டு கொடுத்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!