17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்காக தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் துவக்கம்.

மதுரையில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்காக தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் துவக்கம்.

எழுதியவர்: mohan January 4, 2022, 10:58 am

மதுரை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயத்துக்குட்பட்ட நபர்கள் 1 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு உள்ள நிலையில் 534 பள்ளிகளை சேர்ந்த1 லட்சத்து 19 ஆயிரம் பள்ளி மாணவ மாணவியர் உள்ளனர்.பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் துவக்கி வைத்தார்.முதல்கட்டமாக 49 மருத்துவ குழுக்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது, ஊரக பகுதியில் 39 குழுக்களும் மாநகராட்சி பகுதியில் 10 குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல்கட்டமாக பள்ளி மாணவ மணவியருக்கும் அதனை தொடர்ந்து பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கும், பள்ளி செல்லா நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியளர்களை சந்தித்த ஆட்சியர் அனிஷ் சேகர்,மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 41 ஆயிரம் சிறார்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் ஒரு வாரத்திற்குள் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என தெரிவித்தார்ஓமைக்ரான் தாக்கம் அதிமக ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த ஆட்சியர்மதுரை மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனோ தொற்று 2, 3 ஆக இருந்து வந்த நிலையில் தற்பொழுது 16 ஆக அதிகரித்துள்ளதாகவும்மேலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.ஓமைக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவர்களை தயார்படுத்தி தடுப்பு நடவடிக்கை தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளதுபொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.மேலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் திட்டம் தற்போது வரை உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!