17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநகராட்சி குடிநீர் லாரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டு மர்ம நபர் உல்லாச குளியல் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மாநகராட்சி குடிநீர் லாரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டு மர்ம நபர் உல்லாச குளியல் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

எழுதியவர்: mohan January 4, 2022, 10:38 am

மதுரையில் உள்ள 100 வார்டுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் குழாய்களில் செய்யப்படுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரி, டிராக்டர் மூலம் விநியோகம் செய்கிறது. இதற்காக மதுரை மாநகரில் அரசரடி, கோச்சடை, தெப்பக்குளம், மேகநந்தல், மங்களக்குடி, பாண்டிகோயில், உத்தங்குடி, மருதங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் லாரிகள் மூலம் பிடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.இந்த நிலையில் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள குடிநீர் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டு மர்ம நபர் ஒருவர் உல்லாசமாக குளியலில் ஈடுபட்ட வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கோச்சடை பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் நிலையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்பற்ற முறையில் பராமரிக்கப்படுவதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதால் குடிநீரின் வீணாகும் சூழல் உருவாகி உள்ளதாகவும், இதுபோன்று குடிநீரை வீணாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!