17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பொன்மேனி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கிருதுமால் நதி கால்வாயில் வீணாக செல்லும் குடிநீர்.

பொன்மேனி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கிருதுமால் நதி கால்வாயில் வீணாக செல்லும் குடிநீர்.

எழுதியவர்: mohan January 3, 2022, 1:07 pm

மதுரை மாவட்டம் பொன்மேனி பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் அருகிலுள்ள மாடக்குளம் கண்மாய் பெருகி கிருதுமால் நதி வழியாக நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் கிருதுமால் நதி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டடது குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகுந்தது உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அடைப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர் அப்போது அருகிலுள்ள குடியிருப்பு பகுதியான சிவசக்தி நகருக்கு செல்லும் குடிநீர் குழாயை ஜேசிபி இயந்திரம் அடைப்பை எடுக்கும் போது சேதப்படுத்தியது இதனால் குடிநீர் வரும் தினங்களில் அந்த குழாயின் வழியாக பல்லாயிரம் லிட்டர் குடிநீர் ஒரு மாத காலமாக வீணாக செல்கிறது மாநகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை சரிசெய்து குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!