18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சடச்சிபட்டி கிராம கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தின் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சடச்சிபட்டி கிராம கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தின் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan January 3, 2022, 1:02 pm

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்த நீர் 20க்கும் மேற்பட்ட கண்மாய்களை சென்றடைந்த நிலையில் தற்றொழுது உசிலம்பட்டி அருகே சிறுபட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சிறுபட்டி கண்மாய்க்குப்பின் சடச்சிபட்டி கண்மாய்க்கு செல்ல வேண்டும்.ஆனால் சடச்சிபட்டி கண்மாய்க்குச் செல்லும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!