17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இறையூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில்  விழிப்புணர்வு முகாம்

இறையூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில்  விழிப்புணர்வு முகாம்

எழுதியவர்: mohan January 2, 2022, 5:48 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமிற்கு  இறையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.  இந்த முகாமில் கால்நடைகளுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை |நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.  அம்மாபாளையம் கால்நடை உதவி மருத்துவர் நித்யா தலைமையில், கால்நடை உதவியாளர். ஜாபர்சாதிக் மற்றும் செயற்கை முறை கருவூட்டாளர் சத்திய ஆகியோர் கொண்ட குழுவினர் 400 மேற்பட்ட கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள்  அளித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது..சிறந்த கிடரி கன்றுகளுக்கு முதல் மூன்று இடம் பிடித்த விவசாயிகளுக்கு  ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகள்  வழங்கினார். பின்னர் பெண்கள் பேரணி நடைபெற்றது முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் , வார்டு உறுப்பினர்கள் , ,கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!