17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே மலை மீது அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

உசிலம்பட்டி அருகே மலை மீது அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

எழுதியவர்: mohan January 2, 2022, 1:06 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் மலை மீது பழமை வாய்ந்த மலைராமன் கோவில் உள்ளது.இங்குள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.முன்னதாக பட்டர் ராம்குமார் தலைமையில் பூசாரிகள் ஆஞ்சநேயருக்;கு பால் இளநீர் மஞ்சள் பன்னீரால் அபிஷேகம் செய்தனர்.பின்னர் ஆஞ்சநேயருக்கு பிடித்தமான 1008 வடைமாலை சாத்தப்படடது.பின்னர் வடை குங்குமம் பக்தர்களுக்கு பிரதாசமாக வழங்கப்பட்டது.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மேலும் மேட்டுப்பட்டி கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!