17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி கண்மாய் 15வருடங்களுக்குப் பிறகு நிரம்பி மறுகால் சென்றதையடுத்து மகிழ்ச்சியடைந்த பெண்கள் கண்மாயில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

உசிலம்பட்டி கண்மாய் 15வருடங்களுக்குப் பிறகு நிரம்பி மறுகால் சென்றதையடுத்து மகிழ்ச்சியடைந்த பெண்கள் கண்மாயில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

எழுதியவர்: mohan January 1, 2022, 12:39 pm

வைகை அணையின் நீர் மட்டம் 69அடியை எட்டும் பொழுது அதிலிருந்து வெளியேறும் உபரிநீரைக் கொண்டு உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள 35 கண்மாய்கள் பயன்பெறும் வகையில் 58 கிராம கால்வாயத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மாதம் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது 4வது முறையாக 58 கிராம கால்வாயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது..இதுவரை வைகை நீர் 20க்கும் மேற்ப்பட்ட கண்மாய்களை எட்டியுள்ள நிலையில் உசிலம்பட்டி நகரப்பகுதிக்கு குடிநீர் ஆதரமாக விளங்கும் உசிலம்பட்டி- கருக்கட்டாண்பட்டி கண்மாய்களை நிரப்ப வேண்டுமென 58 கிராம இளைஞர் குழுவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்ற பொதுப்பணித்துறையினர் உசிலம்படடி கருக்கட்டாண்பட்டி கண்மாய்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.கருக்கட்டாண்பட்டி கண்மாய் நிரம்பி வரும் நிலையில் 60ஏக்கர் பரப்பளவு கொண்ட உசிலம்;பட்டி கண்மாய் கடந்த 15 வருடங்களுக்குப் பிறகு நிரம்பி மறுகால் சென்றது.இதனால் மகிழ்ச்சியடைந்த இளைஞர்கள் பெண்கள் கண்மாய் மதகுப்பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டு வைகை நீரை மலர்தூவி வரவேற்றனர்.பின் பொங்கல் பானையுடன் கண்மாயை சுற்றி வந்து இயற்கை அன்னைக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்;;தனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!