18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..

பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..

எழுதியவர்: mohan December 31, 2021, 8:08 pm

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என காவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் காவலர்களின் உடைபொருட்கள் மற்றும் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தார்.பின்னர் காவல் துறையினரிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும்,பணியில் பொறுப்புடனும் நேர்மையுடனும் திறம்பட செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.பின்னர் காவலர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார்.மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பொண்ணரசு,காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்தி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!