17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு

மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு

எழுதியவர்: mohan December 31, 2021, 7:40 pm

இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மீண்டும் மஞ்சப்பை . மார்க்கெட்டில் பொதுமக்களிடம் மஞ்சப்பை உபயோகிக்க விழிப்புணர்வு. பாலிதீன் பைகளைத் தவிர்க்க பொதுமக்களிடம் வேண்டுகோள்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்த மீண்டும் மஞ்சப்பை உபயோகம் என்ற திட்டத்தை இராஜபாளையம் பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதமாக பாலிதீன் கவர்களை தவிர்ப்போம், மஞ்சப்பை உபயோகிப்போம் என்ற முறையில், இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபான்டியன் சந்தை மார்க்கெட் பகுதியில் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பாலிதீன் பைகள் தவிர்க்க வேண்டும்,கலைஞர் ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மஞ்சப்பை பயன்படுத்தப்படுகிறது.இராஜபாளையம் பகுதியில் மஞ்சள் நிறத்தில் திரிந்தவர்களை இராஜபாளையத்தில் இருந்து விரட்டி விட்டேர்கள். ஆனால் மஞ்சள் மஞ்சள் சட்டை போடாமல் இருக்கலாம், கண்டிப்பாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டுமென முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி சுட்டிக்காட்டி பேசினார்.மேலும் வியாபாரியிடம் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தியும் பாலித்தீன் பையை பயன்படுத்தினால் அடுத்தகட்டமாக நகராட்சி மூலம் அவதாரம் விதிக்கப்படும் என அறிவுரை வழங்கப்பட்டன..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!