18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆப்பனூர் கிராமத்திற்குஅடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்பனூர் கிராமத்திற்குஅடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan December 31, 2021, 7:45 am

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியை அடுத்துள்ள திருக்கோதையாபுரம் விலக்கு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.திருக்கோதையாபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆப்பனூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும், வழி நெடுகிலும் தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும்,திருக் கோதையாபுரம் விலக்கில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும், ஆப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பெண்களின் வசதிக்காக புதிய சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!