திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஜம்பு துரை கோட்டை ஊராட்சி, சக்கையை நாயக்கனூர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி , ஒரு தட்டு கிராமத்தில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான விவசாயிகள் மற்றும்
வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவிலான சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட திமுக துணை செயலாளர் நாகராஜன் பேசியதாவது: இந்தியாவை தமிழகத்தில் முதல் இடமாகக் கொண்டு வருவதற்கு இரவு பகல் பாராமல் தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாடுபட்டு வந்ததன் காரணமாக இன்றைக்கு இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அதே மாதிரி அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக விளங்க இது போன்ற திட்டங்களை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று மக்களை மேம்பட செய்ய திமுக அரசு அரணாக இருக்கும் என்று பேசினார். நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் திமுக நகர செயலாளர் செல்வராஜ், ஜம்பு துரை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பவுன்தாய் காட்டுராசா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெள்ளைச்சாமி, மேட்டூர் திமுக பொறுப்பாளர் காசிமாயன், ராஜாங்கம், மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் பிரேமலதா, கிராம நிர்வாக அலுவலர்கள் “சோபனா.கணேசன், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
நிலக்கோட்டை அருகே பட்டா மாறுதல் முகாம்
எழுதியவர்: mohan December 30, 2021, 11:33 am




You must be logged in to post a comment.