18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நல்லபாம்பை கொல்லாமல் முட்புதருக்குள் கொண்டு சென்ற இளைஞர்கள். குவியும் பாராட்டுக்கள்

நல்லபாம்பை கொல்லாமல் முட்புதருக்குள் கொண்டு சென்ற இளைஞர்கள். குவியும் பாராட்டுக்கள்

எழுதியவர்: mohan December 30, 2021, 11:00 am

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் பிரபல டயர் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மதியம் 3 மணி அளவில் நேருநகர் பிரதான சாலையில் சுமார் 2 அடி நீளமுள்ள குட்டி நல்ல பாம்பு ஒன்று சாலையை கடந்து கடைக்குள் புகுந்தது. இதைக்கண்ட கடை ஊழியர்கள் முதலில் சாரை பாம்பு என நினைத்து பிடிக்கச் சென்றனர். ஆனால் அதை கையில் பிடிக்கும் பொழுது அது படம் எடுத்தது அதை பார்த்ததும் பாம்பை அடிக்க சொன்னார்கள். எனினும் அங்கு உள்ள வினோத் என்கின்ற ஊழியரும் சமூக ஆர்வலர் காளமேகம் என்பவரும் பாம்பை அடிக்க முடியாது எனவும் அது ஒரு உயிரினம் தான் அது வாழும் இடத்தில் தான் நாம் வாழ்கிறோம் என சொல்லி பாம்பை அடிக்க மறுத்துவிட்டார்கள். மெதுவாக ஒரு குச்சியை வைத்து இந்தப் பாம்பை அடர்ந்த பகுதிக்கு செல்லும் வகையில் பாம்பை இளைஞர்கள் விட்டனர். இச்செயலானது அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!