17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த சங்கரன்கோவில் எம்எல்ஏ..

இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த சங்கரன்கோவில் எம்எல்ஏ..

எழுதியவர்: mohan December 30, 2021, 7:31 am

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா, வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்குகின்ற சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராஜா சமீபத்தில் பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தேர்வானார். துருக்கி நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில், இந்திய அணி சார்பாக 140 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ராஜா இதில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் தற்போது வெண்கலப்பதக்கம் வென்று வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!