17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர சோதனை;179 நபர்கள் அதிரடி கைது..

தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர சோதனை;179 நபர்கள் அதிரடி கைது..

எழுதியவர்: mohan December 30, 2021, 7:28 am

தென்காசி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கஞ்சா,மது பாட்டில்கள், லாட்டரி மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 179 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் C.சைலேந்திர பாபு IPS உத்தரவு மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (26.12.2021 முதல் 28.12.2021) ஆகிய மூன்று நாட்கள் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில், விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 70 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 659 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 103 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 813 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!