17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

சுரண்டை பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

எழுதியவர்: mohan December 29, 2021, 4:26 pm

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் 58வது பிறந்த தினத்தை முன்னிட்டு 580 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தென்காசி மாவட்ட தமாகா தலைவர் அய்யாத்துரை தலைமை வகித்தார். நகர தலைவர் அருண் தர்மராஜ் வரவேற்றார். மாநில செயலாளர் என்டிஎஸ் சார்லஸ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி 580 பேர்களுக்கு மரக் கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தென்காசி நகர தமாகா தலைவர் வின்சென்ட், கடையநல்லூர் வட்டார தலைவர் முருகன், மாவட்ட துணைத் தலைவர் சென்னை சுப்பிரமணியன், மாவட்ட மாணவரணி தலைவர் சதீஷ் குமார், கிராம கமிட்டி தங்கமுத்து, பாண்டி, விவசாய அணி காசிதர்மம் சின்னசாமி நகர விவசாயிகள் அணி துரை, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் கார்த்திக் துரை, முத்துப்பாண்டி நகர இளைஞர் அணி ராஜீவ்காந்தி, மாணவரணி கணேஷ் பிரபு , தொழிற்சங்க பிரிவு முருகன், பன்னீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!