18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » என்று எரியும் தெரு விளக்கு பலநாள் புகார் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

என்று எரியும் தெரு விளக்கு பலநாள் புகார் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எழுதியவர்: mohan December 29, 2021, 3:09 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 மற்றும் 76 ஆவது வார்டு பகுதிகளில் பல இடங்களில் சுமார் 15 நாட்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் கண்டும் காணாமல் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள் குறிப்பாக மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் அருகே மற்றும் ராமகிருஷ்ணன் வீதி நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் தெரு விளக்கு எரியவில்லை மார்கழி மாதம் என்பதால் பெண்களும் குழந்தைகளும் அதிகாலையில் கோவிலுக்கு செல்வதால் உயிரை கையில் பிடித்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது மேலும் இந்த இடத்தில் காவல்துறையினர் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி யில் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பதிவுகள் ஆகாமல் குற்றவாளிகள் எளிதாக தப்பிக்க வழிவகுத்துவிடும் குற்றங்கள் நடக்கும் முன் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தெருவிளக்குகளை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!