17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்ட விரோதமாக குட்கா பதுக்கிய நபர் கைது..

சட்ட விரோதமாக குட்கா பதுக்கிய நபர் கைது..

எழுதியவர்: mohan December 29, 2021, 9:56 am

ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக குட்கா பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து 4 ,70,000 மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள்,குட்கா,லாட்டரி சீட்டுகள் போன்றவை விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் பகுதியில் வசித்து வரும் செல்லப்பா @ ஆதிலிங்கம் (53) குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் தினேஷ் பாபு மற்றும் காவல் துறையினர் சென்று சோதனை செய்ததில் சட்ட விரோதமாக விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து மேற்படி செல்லப்பா @ ஆதிலிங்கம் (53) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 4,70,100 மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ace வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!