17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மாநகராட்சி முதல் முறையாக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மாநகராட்சி முதல் முறையாக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு.

எழுதியவர்: mohan December 29, 2021, 9:47 am

மதுரைமாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென் கால் பாசன விவசாயிகள் சங்கம் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறதுஇந்த நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக நேற்று ஜல்லிக்கட்டு கமிட்டியை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டதுமாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிராம கமிட்டி மற்றும் தென் கால் விவசாயிகள் இடையே ஒற்றுமை ஏற்படாததால்மதுரை மாநகராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த டெண்டர் விடப்பட்டுள்ளதுகடந்த ஆண்டு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதுஅதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநகராட்சி சார்பாக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளிட்டுள்ளதுஜல்லிக்கட்டில் மேடை அமைக்கவும், பார்வையாளர்கள் அமரும் இடங்கள் மற்றும் காளைகள் நிற்கும் பகுதி பேரிகார்டு பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பணிகள் செய்ய ஒப்பந்தப்புள்ளி வெளியீடுவருகின்ற 31ம் தேதி ஒப்பந்த புள்ளி பெற்று விண்ணப்பம் செய்யலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளிட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!