18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

எழுதியவர்: mohan December 28, 2021, 12:11 pm

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம், 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், நகர்ப்புற ஏழை மக்களுக்காக இரண்டு கோடி வீடுகளை மார்ச் 2022-க்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு கூறுகள் உள்ளன.முதலாவதாக, நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம்.மற்றொன்று, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்.இந்தத் திட்டத்தின்கீழ் அடிப்படை வசதிகளை (கழிவறை, குடிநீர், மின்சாரம்) வழங்கும் வேறு சில திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஒப்புதல்கள் வந்துள்ளன.வீடு பெறுவதற்கான தகுதிகள் இருக்கும்பட்சத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் இதனை தொடர்ந்துமதுரை மாவட்டம் 93 வது வார்டுக்குட்பட்ட பகுதி அழகப்பன் நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் மேம்பாட்டு பொருளாதார அறக்கட்டளை நிர்வாகி சுலோச்சனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!