18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை- 4 வழிச்சாலையில் நள்ளிரவில் செல்லும் லாரி டிரைவர்களுக்கு டீ வழங்கும் காவல் துணை கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள்…

மதுரை- 4 வழிச்சாலையில் நள்ளிரவில் செல்லும் லாரி டிரைவர்களுக்கு டீ வழங்கும் காவல் துணை கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள்…

எழுதியவர்: mohan December 28, 2021, 11:56 am

மதுரை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சேகர் இரவு பணியின் போது நள்ளிரவில் 4 வழிச்சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை முகம் கழுவ செய்து அவர்களுக்கு டீ, முக கவசம் கொடுத்து, வழியனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.அதே போல் இரவு பணியின் போது கொடிக்குளம் 4 வழிச்சாலையில் நள்ளிரவில் வரும் லாரி, வேன் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வாகனங்களை நிறுத்த சொல்லி டிரைவரை முகம் கழுவ செய்து டீ , முக கவசம் கொடுத்து , தூக்கம் வந்தால் வாகனத்தை நிறுத்தி தூங்கி அதன் பின் செல்லவும் என பணிவுடன் அறிவுறுத்தினார்.

மேலும் லாரிகளில் டூல்ஸ்கள் எல்லாம் சரியாக வைத்திருக்கும் டிரைவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டி சென்றால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.இந்த காவல் அதிகாரியின் செயலை பார்த்த தன்னார்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.கனரக வாகனங்கள் வந்தாலே போதும் வாகனத்தை நிறுத்தி லைசென்சை எடு, ஆர்.சி. புக்கை எடு என மிரட்டல் குரல் கொடுத்து ரூ 500 ,1,000 பறிக்கும் அடாவடி போலீசாருக்கு மத்தியில் முகம் கழுவ சொல்லி , டீ கொடுத்து உற்சாகத்துடன் அனுப்பி வைக்கும் இந்த போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிகின்றன

செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!