17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியங்குடியில் சாலை வசதி செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை..

புளியங்குடியில் சாலை வசதி செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை..

எழுதியவர்: mohan December 28, 2021, 11:43 am

புளியங்குடி பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் 12-வது வார்டுக்கு (புதிய வார்டு எண் 14) உட்பட்ட லெப்பைசாபுரம் முடுக்குத்தெரு, லெப்பைசாபுரம் வடக்குத்தெரு ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தெருக்களில் பல வருட காலங்களாக சாலை வசதி போடப்படாததின் காரணமாக அந்த பகுதியில் எந்த வாகனமும் செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளதை கண்டித்தும், விரைவாக அந்த பகுதிக்கு சாலை வசதி செய்த் தரக்கோரியும் SDPI கட்சியின் தொகுதி துணை தலைவர் அஹமது தலைமையில் பாப்புலர் ஃபிரண்ட் நகர தலைவர் அபுசாலிஹ், 12-வது வார்டு கிளை நிர்வாகி அப்பாஸ், 11வது வார்டு செயலாளர் ராஜா முஹம்மது மற்றும் 18வது வார்டு கிளை நிர்வாகி நவாஸ் கான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நகராட்சி பொறியாளர் முஹைதீன் அப்துல் காதர் விரைவாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!