18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கட்டிடத்தை இடிப்பார்களா அதிகாரிகள்! பொதுமக்கள் எதிர்பார்ப்பு! நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் ஆய்வு!

அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கட்டிடத்தை இடிப்பார்களா அதிகாரிகள்! பொதுமக்கள் எதிர்பார்ப்பு! நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் ஆய்வு!

எழுதியவர்: mohan December 28, 2021, 11:23 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மிகவும் பாழடைந்து பயனற்ற நிலையில் போலீஸ் குடியிருப்பு இருந்து வருகிறது.இதில் ஒருபகுதியாக அமைந்திருக்கும் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இப்பகுதியை கடந்து தனியார் பள்ளி ஒன்று உள்ளது இதன் காரணமாக ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் இதன் வழியாக தான் செல்ல வேண்டும்.பல்வேறு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இந்த சாலையில் அதிகமாக சென்று வருகின்றனர்.ஆகையால் இந்த பாழடைந்த கட்டிடம் இடிந்து ஏதேனும் உயிர் பலி ஏற்படும் முன் கட்டிடத்தை இடித்து பொதுமக்களின் அச்சத்தை போக்குவார்களா அதிகாரிகள்.இது சம்பந்தமாக தகவல் கிடைத்ததை அடுத்து நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ் இடிந்த கட்டிடத்தை ஆய்வு செய்து சென்றுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!