17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் பயிற்சி முகாம்.

பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் பயிற்சி முகாம்.

எழுதியவர்: mohan December 28, 2021, 7:33 am

திருவண்ணாமலை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் முயல் குட்டி படை, குருளையர் படை, நீலப்பறவை படைகளுக்கான பயிற்சி முகாம் திருவண்ணாமலை குட்வில் நர்சரி மற்றும் பிரைமரி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வம் அறிவுரையின்படி மற்றும் ஆலோசனையின் படி நடைபெற்ற 7 நாட்கள் பயிற்சி முகாமில் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்பயிற்சி முகாமில் தலைமை பயிற்சியாளராக பவானி , குருளையர் படைக்கு கற்பகம் மற்றும் புனிதா,நில நிற பறவை படைக்கு கேரளா மாநிலத்தில் இருந்து தலைமை பயிற்சியாளராக கிருஷ்ணம்மாள், உதவி பயிற்சியாளர் கோபிகா, கஸ்தூரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் ஏழு நாள் நடைபெற்ற பயிற்சி முகாமை பார்வையிட்டு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டார் பின்னர் ஆசிரியர்களுக்கு பாராட்டினார்.மாவட்ட அமைப்பு ஆணையர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் ஆல்வின் இமானுவேல் மாவட்ட திரி சாரண ஆணையர் சுதாகர் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்தர் சுமதி ஆகியோர் முகாம் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பியூலா கரோலின் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!