18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பேரூராட்சி திமுக நிர்வாகிகளுக்கு பூத்துக் கமிட்டி ஆலோசனை கூட்டம்

நிலக்கோட்டை பேரூராட்சி திமுக நிர்வாகிகளுக்கு பூத்துக் கமிட்டி ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan December 27, 2021, 10:07 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி நகரச் செயலாளர் கதிரேசன் தலைமையில் திமுக நகர நிர்வாகிகள் இடையே நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்து  பூத்து கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட திமுக துணை செயலாளர் நாகராஜன், நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிலக்கோட்டை பேரூராட்சிகளில் 15 வார்டுகளிலும் புதிய உறுப்பினர்கள் 5000 பேர்  புதிதாக சேர்க்க வேண்டும், நடைபெற இருக்கின்ற பேரூராட்சி வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் யாராக இருப்பினும் பாடுபட்டு வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய பொருளாளர் காளிமுத்து,மாவட்ட இளைஞரணி துணைச் அமைப்பாளர் கரிகால பாண்டியன்,  நகரத் துணைச் செயலாளர்கள் ஜோசப்கோவில் பிள்ளை, ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவு, தியாகு, செல்விகபடி முத்து, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் வசந்தி, ஒன்றிய மகளிர் அணி பொறுப்பாளர் சரண்யா, குண்டலப் பட்டி கிளை  பொறுப்பாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!