திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.ஓய்வுபெற்ற கோட்டாட்சியர் சண்முகம் தலைமை தாங்கினார் . ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் மாணிக்கம், முருகேசன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஆசை முஷிர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.நூலக வளர்ச்சி மற்றும் புரவலர் சேர்த்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. செங்கம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அதிகளவு நூல்களை படிக்க ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. வாசகர் வட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. புதிய வாசகர் வட்ட தலைவராக ஆசிரியர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் மணிமாறன், பொருளாளர் கவியரசன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் தலைமையாசிரியர் வெங்கடேசன், ஆசிரியர் சுந்தர வினாயகம், குணசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கம் வாசகர் வட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு.
எழுதியவர்: mohan December 26, 2021, 1:22 pm




You must be logged in to post a comment.